சில கேள்விகளும் சில பதில்களும்!
என் நண்பர் ஒருவரைக் குறித்து என்னை நன்கு
அறிந்த ஒருவர் கேட்டார், "உங்க பிரெண்ட் குடிப்பாரா?"
நான், "ம்ஹூம்!" என்றேன்.
"உங்க பிரெண்ட் என்று தெரிந்தும்
நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாது!" என்று அவரே வருத்தப்பட்டுக் கொண்டார்.
எனக்குக் குடிகார நண்பர்கள் இல்லையென்று அவராகவே நினைத்துக் கொண்டது பற்றி எனக்குப்
பரிதாபமாக இருந்தது.
"குடிக்காம இருக்கிறதுக்கு சூழ்நிலையும்
ஒரு முக்கியக் காரணம் சார்!" என்றார் அவர்.
"இருக்கலாம்!" என்றேன் நான்.
"என்ன இருக்கலாம்? உங்க பிரெண்டோட
குடும்பம் எப்படி? உங்க பிரெண்ட் எங்க வேலை பார்க்கிறார்?" என்று நான் அலட்சியமாகப்
பதில் சொல்லி விட்டதைப் போல் என் மேல் சீறிப் பாய்ந்தார்.
"என் பிரெண்டோட அப்பா மொடா குடிகாரர்.
அவன் டாஸ்மாக்லதான் வேலை பார்க்கிறான்!" என்றேன் நான்.
அன்றிலிருந்து இன்று வரை தான் குடித்தே
சீரழிவதைப் பற்றி என்னிடம் இப்போதெல்லாம் அவர் நியாயப்படுத்துவதில்லை.
*****
No comments:
Post a Comment