16 Jun 2017

அரசியல் பேசாமல் தப்பிக்க முடியாது சாரே!


அரசியல் பேசாமல் தப்பிக்க முடியாது சாரே!
            தனது மகள் பதினோரு வயதில் வயதுக்கு வந்து விட்டதாக வருத்தப்பட்டுக் கொண்டார் நண்பர் ஒருவர்.
            இன்றைய உணவு முறைதான் இதற்குக் காரணம் என்று அவரே மேலதிக கருத்தையும் எடுத்துரைத்தார்.
            இப்படி இள வயதிலேயே வயதுக்கு வரும் பெண்களுக்கு சினைப்பை நீர் கட்டிகள், கர்ப்பப்பைக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு அவரே பயமுறுத்தினார்.
            மற்றும், இப்படி இள வயதிலேயே பெண்கள் வயதுக்கு மற்றுமொரு காரணம் அவர் மகள் பிராய்லர் கோழி இறைச்சியை அதிகமாகச் சாப்பிடுதுதான் என்றும் கூடுதலாக வருத்தப்பட்டுக் கொண்டார்.
            கடைசியாக அவர் சொன்ன கருத்துதான் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது, "கவர்மென்ட் மாட்டு இறைச்சியை தடை பண்றதுக்குப் பதிலா, கோழி இறைச்சியைத் தடை பண்ணணும் சார்!"
            தான் உண்டு, தன் பெண்டு உண்டு, தன் பிள்ளைகள் உண்டு என்று இருப்பவராலும் அரசியல் பேசாமல் தவிர்க்க முடியாது என்று நான் உணர்ந்த தருணம் அது!
*****

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...