8 Jun 2017

புல்லாங்குழல் மனசு


புல்லாங்குழல் மனசு
கடைசிப் பேருந்தைத்
தவற விட்டவனின்
மன விசும்பல் போலிருக்கிறது
இயலாமையை எதுவும் செய்ய முடியாத
அந்தப் பொழுதுகளில்
திருவிழாவில் தொலைந்தவனின்
மனநிலையைப் போலிருக்கிறது
விஷேசங்களில் சமனின்மையைச்
சந்திக்கும் பொழுதுகளில்
ரங்க ராட்டினத்தின் உச்சியில்
ஏற்படும் பீதியைப் போலிருக்கிறது
எதிர்பாராமல் வந்து நிற்கும்
கடன் கொடுத்தவனைக்
கண்களால் பார்க்கும் பொழுதுகளில்
இவைகள் இல்லாவிட்டாலும்
வாழ்க்கை ருசிக்காது என்று
ஆறுதல் கொள்கிறது மனசு
எதிர்பாராமல் விழுந்து விட்ட துளைகளை
புல்லாங்குழலாய் மாற்றிக் கொள்பவனின்
மனநிலையைப் போல
*****
நன்றி - ஆனந்த விகடன் - 14.06.2017 இதழ் / பக்கம் - 65

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...