8 Jun 2017

கனாக்காணும் கலைத்துறை முதல்வர்கள்


கனாக்காணும் கலைத்துறை முதல்வர்கள்
            தமிழர்களின் சினிமா பற்றுக்கு ஓர் அளவில்லை. ஆட்சி அதிகாரத்தைத் தூக்கிக் கொடுத்து விடும் அளவுக்கு அது அளவில்லாதது.
            இப்போது கூட,
            ரஜினி,
            கமல்,
            அஜித்,
            விஜய் என்று அவர்களை அரசியல் தலைவர்களாக்கி தமிழ் நாட்டின் ஆட்சிப் பொறுப்பைத் தூக்கிக் கொடுத்து விட தயாராக இருக்கும் தமிழர்கள் கணிசமாக இருக்கிறார்கள்.
            சிவாஜி, பாக்கியராஜ், டி.ராஜேந்தர் என்று தமிழர்களை நம்பி கட்சித் தொடங்கிப் பார்த்தவர்களிலிருந்து, குஷ்பூ, கார்த்தி, ராமராஜன் என்று தமிழர்களை நம்பி கட்சியில் இருந்து பார்த்தவர்கள் வரை எத்தனை எத்தனை அரசியல் தலைவர்கள் சினிமா உலகிலிருந்து தமிழர்களுக்கு!
            பக்தவச்சலத்திற்குப் பின் பன்னீர்செல்வம் காலத்தில்தான் திரைத்துறைக்குத் தொடர்பில்லாத ஒரு முதலமைச்சரின் ஆட்சிக்காலம் தமிழகத்தில் தொடங்குகிறது. இது தொடருமா அல்லது பழைய நிலையே மீளுமா என்பது எதிர்காலம் மட்டுமே அறிந்த ரகசியம்.
            பக்தவச்சலம்,
            பன்னீர்செல்வம் - இருவர் பெயரும் ப-வில் தொடங்குவதும், ம்-இல் முடிவதும், இரண்டு பெயர்களுக்கும் கச்சிதமாக எட்டு எழுத்துகள் அமையப் பெறுவதும் தற்செயலா, விதியின் விளையாட்டா? என்பதை எண்கணித சோதிடர்கள்தான் கணித்துச் சொல்ல வேண்டும்.
*****

No comments:

Post a Comment

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும்

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும் உண்மை பொய் ஏமாற்றம் நியாயம் எப்போதும் வெளியில் சொல்ல முடியாத ஒரு பட்டியல் இருக்கிறது ஏம...