இந்துத்துவம் எனும் சாதித்துவம்
தேசத் தந்தை என்று அழைக்கப்படும் காந்தியடிகளை,
புத்திசாலி பனியா என்று அழைத்து இருக்கிறார் அமித்ஷா.
காந்தியடிகளை வியாபாரியாகச் சித்தரிப்பது
தவறு என்று அதற்கு எதிர்குரல்களும் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
சாதியின் பெயரால் காந்தியடிகளை அடையாளப்படுத்துவது
அமித்ஷா போன்ற தலைவர்களுக்கு அழகாக இருக்க முடியாது. அவ்வாறு அவர் குறிப்பிடுவதன்
மூலம் அவர் கையில் எடுத்திருக்கும் இந்துத்துவம் என்பது சாதித்துவம் என்றாகி விடுகிறது.
உண்மையில் இந்துத்துவம் என்பது சாதித்துவமாகத்தான்
இருக்கிறது. அதனால்தான் அவரால் அப்படி ஒரு பேச்சைக் கட்டுபடுத்த முடியவில்லை. அம்பானி,
அதானி போன்ற புத்திசாலி வியாபாரிகளோடு பழகிப் பழகி அதே சொல்லாடலில் கூட அவர் காந்தியடிகளையும்
புத்திசாலியான வியாபாரி என்று அவர் குறிப்பிட்டு இருக்கக் கூடும்.
புத்திசாலியான வியாபாரியாகக் குறிப்பிடப்படும்
காந்தியடிகள் நினைவாக சர்வோதயங்கள்தான் இருக்கின்றன. கார்ப்பரேட் கம்பெனிகள் எதுவும்
இல்லை. அந்தச் சர்வோதயப் பொருட்களிலும் கூட தற்போது பிரதமர் மோடி அவர்களின் படங்கள்
அச்சிடப்படுவதாக செய்திகள் வருகின்றன.
ஒருவேளை காந்தியடிகள் புத்திசாலியான பனியாவாக
இருந்திருந்தால் நாம் இன்னும் ஆங்கிலேயர்களின் அடிமைகளாகத்தான் இருந்திருப்போம், இந்தியக்
குடிமகன்களாக இருந்திருக்க மாட்டோம்.
*****
No comments:
Post a Comment