9 Jun 2017

ஆறித் தெளிதல்


ஆறித் தெளிதல்
தொளில் ஹேண்ட் பேக்கும்
மனதில் ஆதங்கமாகவும்
நெரிசல் மிகுந்த பேருந்தில் பயணிக்கும் அவள்
ஒரு டூர் கூட
போக முடியவில்லை என்று
சமயங்களில் தோன்றும் சலிப்பை
அகற்றிக் கொள்கிறாள்
இந்த அலுவலக வேலையும் வாய்க்காமல்
வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கும்
தன் தோழிகளைப் பார்க்கையில்.
*****

தெரிந்ததும், தெரியாததும்
உள்ளே போகத் தெரியும்
அதை விட்டு
வெளியே வரத் தெரியாது
பாசத்திற்குள் செல்லும்
அம்மாவுக்கு.
*****

No comments:

Post a Comment

அரிசி எந்தக் கடையில் விளைகிறது?

அரிசி எந்தக் கடையில் விளைகிறது? காளையரின் வியர்வை சிந்தி காளைகளின் சாணமும் கோமியமும் விழ ஏர் உழுத நிலத்தை டிராக்டர் கார்பன் புகை உமி...