9 Jun 2017

பஞ்ச பூத வணக்கம்


பஞ்ச பூத வணக்கம்
            பஞ்ச பூதங்களைத் தெய்வங்களாக வணங்கினார்கள் நம் முன்னோர்கள்.
நீர்,
நிலம்,
காற்று,
தீ,
ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களாகிய இவ்வைந்தையும் ஐம்பூதங்கள் என்று தொல்காப்பியமும் விதந்தோதும். புறநானூற்றிலும் ஐம்பூதங்கள் பற்றிய செய்திகளுண்டு.
            அவைகளை ஏன் தெய்வங்களாக நம் முன்னோர்கள் வணங்கினர் என்பது நடக்கும் நிகழ்வுகளைக் கண்டுதான் புரிந்து கொள்ள முடிகிறது. தீமைகள் பெருகும் போது அவைகளை அழிக்க நானே அவதாரமாக வருவேன் என்று தெய்வங்கள் கூறுவதாகக் ஆத்திகப் பெருமக்கள் கூறும் கூற்றுகளை வைத்துக் கொண்டு பார்க்கும் போது ஒரு வகையில் பஞ்ச பூதங்கள்தான் அவ்வாறு அவதாரங்கள் போல் வருவதாக எண்ணத் தோன்றுகிறது.
            விதிகளை மீறி கட்டடிங்களைக் கட்டாதீர்கள் என்று அரசு நெறிமுறைகள் கூறியும், நீதிமன்றம் கண்டித்தும் கேட்காதவர்களைப், பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய தீயே விபத்தாக ஏற்பட்டு கட்டிடங்களை இடிக்க வைக்கிறது, தீமைகளை அழிக்கும் அவதாரம் போல.
            அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும், இவைகள் இரண்டும் கொல்லா விட்டால் பஞ்ச பூதங்களில் ஒன்று கொல்லும்!
*****

No comments:

Post a Comment

அலைபேசி மோசடிகளிலிருந்து விழிப்புணர்வுடன் இருக்க…

அலைபேசி மோசடிகளிலிருந்து விழிப்புணர்வுடன் இருக்க… தற்போது நீங்கள் யாருக்காவது அலைபேசி செய்தால், அலைபேசி மோசடி குறித்த விழிப்புணர்வுக் குரல...