9 Jun 2017

இவர்தான் அவர்


இவர்தான் அவர்
இவர்தான் ஆற்றில் முதன் முதலில்
மணல் அள்ள ஆரம்பித்தார்
கல்வி வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என
ஊரில் முதன் முதலில்
தனியார் பள்ளியை ஆரம்பித்தார்
நம்ம சாதிக்கார பயலையும்
நாலு பேர் மதிக்கணும்ல என்று
சாதிச் சங்கமும் ஆரம்பித்தார்
எதுவா இருந்தாலும் காசு வேணும் என்று
நான்கு ஊர் தள்ளி இருந்த பொரம்போக்கு நிலத்தில்
பீர் பாக்டரியும் ஆரம்பித்தார்
அதிகாரமும் கையில் இருந்தால்தான்
அண்டியிருக்கிறவனுக்கு நல்லது பண்ண முடியும் என்று
சுற்று வட்டக் கிராமங்கள் பதினெட்டுக்கும்
கட்டப் பஞ்சாயத்தும் செய்ய ஆரம்பித்தார்
சமூக சேவை என்ற பெயரில்
டவுனுக்கு சற்று முன்னதாக
இன்ஜினியரிங் காலேஜ் ஆரம்பித்து கல்வித் தந்தையுமானார்
டவுனுக்குள் நடுமத்தி சென்டரில்
நர்சிங் காலேஜ் ஆரம்பித்து கல்வித் தாயுமானார்
கோயில் சிலை கடத்தி காசு பார்த்து
அதில் கொஞ்சம் கிள்ளி எடுத்து கோயில் கும்பாபிஷேகங்கள்
சில செய்து ஆன்மீகப் பேரொளியாய் ஒளி பரப்பினார்
விருதுகள் பல வாங்கி, பெயர்கள் பல தாங்கி,
ப்ளக்ஸ்கள் பல வைத்து
கடைசியில்
நானே உங்கள் வேட்பாளர் என்று
இப்போது ஓட்டுக் கேட்க வருகிறார்.
*****

No comments:

Post a Comment

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும்

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும் உண்மை பொய் ஏமாற்றம் நியாயம் எப்போதும் வெளியில் சொல்ல முடியாத ஒரு பட்டியல் இருக்கிறது ஏம...