26 Jun 2017

நகரத்திற்கானப் பால்


நகரத்திற்கானப் பால்
காகிதம் ஒட்டும் நபரைத் தேடி
நகரெங்கும் அலைகிறது பசு!
முன்பு பசை வாளிகளோடு வந்த அவர்கள்
ஆங்காங்கே ப்ளக்ஸ்களைக் கட்டி விட்டு
அகல்கிறார்கள்!
பால் கேனில் பால் விற்றுச் சென்ற
பால்காரர்
பாக்கெட் பால் போடுபவராகி
ப்ளாஸ்டிக் டப்பில் வைத்து
இருசக்கர வாகனத்தில் விரைந்து ‍கொண்டிருக்கிறார்!
ஒட்டு மொத்த நகரத்திற்கும் தேவையான பால்
எங்கே சுரக்கிறது என்று
தன் மடியைப் பார்த்தபடியே
காற்றில் பறந்து வரும்
பாலீதீனைத் திங்க தயாராகிறது
பகலெங்கும் அலைந்து திரிந்த பசு!
******

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...