26 Jun 2017

இலை, கிளையெங்கும் பழுத்த மரம்


இலை, கிளையெங்கும் பழுத்த மரம்
வளாகமெங்கும் மரம் வளர்க்க வேண்டும் என்று
வைக்கப்பட்ட மரம்
தினம் தினம் இலைகளை உதிர்க்கிறது!
வேகமாக வீசும் காற்றில்
கிளைகளையும் முறித்து வீசுகிறது!
கோடைக்கு இதமான நிழலைத் தரும் அது
மழைக்காலத்துக்குத் தேவையான மழையையும்
இலைகள் வழி மேகத்திற்கு
அனுப்பிக் கொண்டு இருக்கிறது!
கூட்டி கூட்டி அலுத்துப் போனவர்கள்
வேரில் வைத்த அமிலத்தை
ஏற்று இலைகளை முதலிலும்
கிளைகளைப் பின்னும் பழுக்கச் செய்தது
பிஞ்சுகள் முற்றுவதற்கு முன்னே
வெம்பிப் போன அந்த மரம்!
******

No comments:

Post a Comment

கடனில் புகா மனை!

கடனில் புகா மனை! பல நேரங்களில் சட்டென்று ஓர் அறிவுரையை வழங்கிட துடிப்பதில் மனதைப் போன்ற ஒரு போதை மிருகத்தை இந்த உலகத்தில் வேறெங்கும் பார்க...