14 Jun 2017

இல்லையென்று இருந்த போது...


இல்லையென்று இருந்த போது...
பழகி விட்ட வாகன சப்தத்தில்
உன் மெளனம் எடுபடவில்லை.
பல சில கோப தாபங்களில்
உன் புன்னகை புரிந்து கொள்ளப்படவில்லை.
அரக்கப் பரக்க இருந்த பரபரப்புகளில்
உன் முகத்தில் தேங்கியிருந்த சோகம்
கடைசி வரை கண்டு கொள்ளப்படவில்லை.
இன்று,
முதலாமாண்டு நினைவஞ்சலி கொடுக்க
உன் புகைப்படம் பார்த்த போது
அனைத்தும் ஒரு புயலைப் போல வந்து தாக்க
நானோ ஒரு கட்டுமரம் இழந்த
நடுக்கடல் மீனவன் போல்
தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்.
*****

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...