14 Jun 2017

ஸ்ருதி ஹாசனின் நடிப்பு - ஒரு பார்வை


ஸ்ருதி ஹாசனின் நடிப்பு - ஒரு பார்வை
            அஜித்குமாரின் வேதாளம்,
            சூர்யாவின் சிங்கம்-3
                        ஆகிய படங்களில் ஸ்ருதி ஹாசனின் நடிப்பைப் பார்த்தேன். கமல் எனும் திரைஞானியின் மகளாகக் கருதிக் கொண்டு ஸ்ருதி ஹாசனின் நடிப்பைப் பார்த்த எனக்கு ஏமாற்றம்தான். அவர் நடிப்பில் குறை சொல்ல முடியாது. அவர் ஏற்றுக் கொண்ட பாத்திரங்கள் அப்படி அமைந்து விட்டன. அல்லது அவரது வெளிப்படாத படி அவரது பாத்திரங்கள் அமைக்கப்பட்டு விட்டன.
            சதிலீலாவதி என்ற படத்தில் கோவை சரளாவை கதாநாயகியாக்கி அப்படி நடிக்க வைத்திருப்பார் கமல்ஹாசன். அவரைப் பழி வாங்குவது போல, அவரது மகளை வைத்து உட்டாலக்கடி உல்டா வேலையை ஸ்ருதி ஹாசனுக்குப் பண்ணியிருப்பதாக தோன்றியது.
            அவரது நடிப்பு ஏமாற்றி விட்டதாகச் சொன்னாலும், தமிழ் சினிமாவைப் புரிந்து கொண்டவர் அவர் என்பதை அவரது நடிப்புப் புலப்படுத்திற்கு என்பதை என்னால் மறுக்க முடியாது. அவர் நடித்த தெலுங்குத் திரைப்படம் ஒன்றைப் பார்த்தால் தெலுங்கு திரையுலகையும் அவர் நன்கு புரிந்து கொண்டவர் என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.
*****

No comments:

Post a Comment

மகிழ்ச்சியோடு இருக்கும் கலை! The Art of Living Happiness!

நம் முன்னோர்களின் மகிழ்ச்சி ரகசியம்! மகிழ்ச்சியான மக்களுக்கும் மகிழ்ச்சியற்ற மக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுதான் என்ன? இரு வகை மனிதர்கள...