9 Jun 2017

ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு காரணமும்


ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு காரணமும்
சுகர்னு தெரிஞ்சிருந்தும்
லட்டை எடுத்துச் சாப்பிடுகிறார்
கொலஸ்ட்ரால் இருப்பது புரிஞ்சும்
மட்டன்னா வெளுத்து வாங்குகிறார்
ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு கதை இருக்கிறது
மஞ்சள் காமாலைன்னு அறிஞ்சிருந்தும்
டாஸ்மாக்குப் போயிடுறார்னு புலம்புவதைப் போல.
*****

போராட்டம்
காவிரித் தண்ணிக்காகத்தானே போராட்டம்
என்பது தெரிந்திருந்தும்
மனசு கூசாமல் கேட்கிறார்கள்
போராட்டத்தின் முடிவில் ஆளுக்கொரு குவார்ட்டர்.
அவரும் மனம் சலிக்காமல் வாங்கிக் கொடுக்கிறார்
கூட்டமாக ஊரிலிருந்து பத்துப் பேராவது வந்தார்களே
என்ற திருப்தியில்.
*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...