9 Jun 2017

சீஸசனல் ஜாக்பாட்


சீஸசனல் ஜாக்பாட்
            எங்கு பார்த்தாலும் கூட்டத்துக்கு ஆள் பிடிக்கும் ஒரு கூட்டம் நின்று கொண்டிருக்கிறது.
            முன்பு, கட்சிக் கூட்டத்திற்கு ஆள் பிடித்தார்கள்.
            தலைவர்களின் பிறந்த நாள் விழா, சிறந்த நாள் விழா, இறந்த நாள் விழா என்று ஆள் பிடித்தார்கள்.
            இன்று...
            என்ஜினியரிங் காலேஜூக்கு ஆள் பிடிக்கிறார்கள்,
            பாலிடெக்னிக் படிப்புக்கு ஆள் பிடிக்கிறார்கள்,
            ஐ.டி.ஐ. படிப்பதற்கும் ஆள் பிடிக்கிறார்கள்,
            ஸ்கூல், காலேஜ் என்று எல்லாவற்றின் சேர்க்கைக்கும் ஆள் பிடிக்கிறார்கள். கையில் பைலை வைத்து நின்று கொண்டிருந்தால்... அப்படியே பிடித்துக் கொண்டு போய் ஒரு காலேஜின் முன் நிறுத்தி விடுகிறார்கள்.
            ஒரு ஆட்மிஷனுக்கு ஆள் பிடித்துத் தந்தால் சுளையாக ரெண்டாயிரம் என்கிறார்கள். அப்படியே ஒரு ரெண்டாயிரம் நோட்டு. ஆள் பிடிக்கும் சாமர்த்தியமும், சாதுர்யமும் இருந்தால் ரெண்டாயிரம், ரெண்டாயிரமாகச் சம்பாதிக்கலாம். சாமர்த்தியமும், சாதுர்யமும் இருப்பவர்களுக்கு இந்த சீஸன் ஜாக்பாட்தான்.
            என்ஜினியரிங் காலேஜ் ஒன்றிற்கு விரிவுரையாளர் பணி கேட்டுச் சென்ற என் நண்பன் ஒருவனைக் கேட்ட முதல் கேள்வி, "வருஷத்துக்கு எத்தனை அட்மிஷன் பண்ண முடியும் உங்களால்?" என்பதைக் கொண்டு நீங்களே புரிந்து கொள்ள வேண்டியதுதான் நிலைமையை.
*****

No comments:

Post a Comment

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும்

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும் உண்மை பொய் ஏமாற்றம் நியாயம் எப்போதும் வெளியில் சொல்ல முடியாத ஒரு பட்டியல் இருக்கிறது ஏம...