26 Jun 2017

விற்று விட்ட நிலம்


விற்று விட்ட நிலம்
ஓலைக் குடிசைக்கு கூப்பிடு தூரத்தில்
தூக்கணாங்குருவி கூடு கட்டும்
தலைக்கு மேலே
உளவு பார்க்கும் விமானங்கள் போல
தட்டான்கள் பறந்து செல்லும்
நிமிர்ந்து நிற்கும் பனை, ஈச்சை
இரண்டும் பேசிக் கொண்டிருப்பது போல
பறவைகளொலி சலசலக்கும்
வளைந்த தென்னை இளநீர்க் குலையை
குளம் நடுவே நீட்டியிருக்கும்
வாழை குலை தள்ளி
அவரைப் பந்தல் மேல்
ஒரு குட்டுப் போட்டிருக்கும்
உம்பளச்சேரி காளைகள் ஒரு சிலுப்பு சிலுப்பி
கொம்புகளால் கீறி
நிலத்தை உழ முயற்சித்திருக்கும்
அதாகப்பட்டது, விற்று விட்ட நிலத்தில்
இப்படியும் நிகழ்ந்திருக்கும்
அல்லது
அவைகளெல்லாம் ப்ளாட்டாகி
இடமெல்லாம் ப்ளாட்டாக ஆவதும் நிகழ்ந்திருக்கும்!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...