25 Jun 2017

சிவப்பு முக்கோணமும், கருத்தரிப்பு மையங்களும்


சிவப்பு முக்கோணமும், கருத்தரிப்பு மையங்களும்
            மக்கள் தொகைக் கட்டுபாட்டிற்காக ஆட்களைத் தேடிப் பிடித்து அறுவை சிகிச்சை செய்த காலம் போய், மக்கள் இப்போது கருத்தரிப்பு மையங்களைத் தேடிச் செல்லும் நிலைமை உருவாகி விட்டது. அதிகபட்சமாக முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குள் நேர்ந்த மாற்றம் இது.
            ஒரு நகரில் நுழைந்தால் பிரமாண்ட கட்டிடங்களாய் கருத்தரிப்பு மையங்களைக் கொண்ட மருத்துவமனையையும், சர்க்கரை நோய்க்கு சிகிச்சை செய்யும் மருத்துவமனையையும் காண முடிகிறது. அந்தக் கட்டிடங்களுக்குள் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
            அந்தக் கட்டிடம் இருந்த இடத்தில் முன்னொரு காலத்தில் மக்கள் தொகையைக் கட்டுபடுத்தச் சொல்லி அறிவுறுத்தும் சிவப்பு முக்கோண விளம்பரம் இருந்திருக்கக் கூடும். இன்று நிலைமை மாறி விட்டது.
            அங்கிருப்பவர்களிடம் பேசினால் பரிதாபமாக இருக்கிறது. அவர்கள் தங்களைத் தாங்களே குறை கூறிக் கொள்கிறார்கள்.
            "சிக்கன்னா ஒரு பிடி பிடிப்பேன் சார்! அதான் இப்படியாகிட்டேன்!" என்கிறது ஒரு குரல்.
            "மூணு வேளையும் புரோட்டாதான் சார் சாப்பிடுவேன்!" என்கிறது மற்றொரு குரல்.
            "ஜங் புட், பாஸ்ட் புட்தான் காரணம்னு சொல்றார் டாக்டர்!" என்கிறது இன்னொரு குரல்.
            இப்படி ஒவ்வொரு குரலும் ஒவ்வொரு விதமாக ஒலிக்கின்றன.
            நுட்பமாக யோசித்துப் பார்த்தால் ஒரு விசயம் விளங்கும், உணவில் நேர்ந்த அந்நிய மற்றும் ரசாயனப் படையெடுப்பைத் தடுக்க தவறி விட்டோம் நாம்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...