13 Jun 2017

இயந்திரங்களின் சதி


இயந்திரங்களின் சதி
            தொழில்நுட்பம் நம் வாழ்வை எளிமையாக்கி விட்டதாக பேசிக் கொள்கிறோம். மாவரைக்கும் இயந்திரத்தில் (கிரைன்டரில்) அரை மணி நேரத்தில் மாவரைத்து விட்டு, குளிர்பதனப் பெட்டியில் (பிரிட்ஜில்) அதை சேமித்து வைத்து விட்டால் ஒரு வாரத்திற்கான காலை சாப்பாட்டிற்கான மாவு தயார். அதோ போல் சட்டினி அரைக்கும் இயந்திரத்தில் (மிக்ஸியில்) போட்டு அடிக்க வேண்டியவைகளை அடித்து விட்டால் ரெண்டு நாள்களுக்கு சட்டினி குறித்த கவலையில்லை.
            ஒரு நாள் வத்தல் குழம்பு வைத்து விட்டால் பதினைந்து நாள்களுக்குக் குழம்பு குறித்த சிந்திக்க வேண்டியதில்லை. மனசு குளிர குளிர்பதனப் பெட்டியில் (பிரிட்ஜில்) வைத்து சாப்பிடலாம்.
            இப்படி வாழ்க்கை எளிதாகி விட்டதாக, அதனால் காலம் சுருங்கி விட்டதாக நினைத்துக்‍ கொள்கிற நாம், தினந்தோறும் எத்தனை கிலோ மீட்டர்கள்? எவ்வளவு மணி நேரங்கள்? செலவழித்து, இரு சக்கர வாகனத்திலோ, அல்லது பேருந்திலோ வீட்டுக்கும், பணியிடத்துக்கும் தினம் தினம் சென்று மீள்கிறோம். 
            இடையே வாகன நெரிசல் (டிராபிக்) ஏற்பட்டு விட்டால் நிலைமையச் சொல்லவே வேண்டாம்.
            நாம் நவீன் கருவிகள் மூலம் சிக்கனப்படுத்திய நேரமெல்லாம் இப்படி பயணத்திலும், வாகன நெரிசலின் காத்திருப்பிலும் தொலைக்கத்தானா?
            விரைவில் சமைப்பதற்கும், துணி துவைப்பதற்கும், வீடு சுத்தம் செய்வதற்கும் இந்த இயந்திரங்கள் உதவுவது போல் உதவி, பேருந்தைப் பிடிப்பதற்காகவும், தொடர்வண்டியைப் பிடிப்பதற்காகவும் ஓட ஓட விரட்டி அடித்து, பணி புரியும் இடத்தில் காலை தொடங்கி, மாலை வரை நம்மை ஓர் இயந்திரம் போலவே மாற்றி வைத்திருக்கும் சதியைத்தான் அந்த இயந்திரங்கள் நயவஞ்சகமாக செய்திருக்கின்றன என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்?
*****

No comments:

Post a Comment

மகிழ்ச்சியோடு இருக்கும் கலை! The Art of Living Happiness!

நம் முன்னோர்களின் மகிழ்ச்சி ரகசியம்! மகிழ்ச்சியான மக்களுக்கும் மகிழ்ச்சியற்ற மக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுதான் என்ன? இரு வகை மனிதர்கள...