26 Jun 2017

பெரியார்களும், அம்பேத்கார்களும் மீண்டும் பிறந்து வருவார்களாக!


பெரியார்களும், அம்பேத்கார்களும் மீண்டும் பிறந்து வருவார்களாக!
            திரு.வி.க.கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் ஐயா ஜான் பீட்டர் அவர்கள் வந்த போது, நான் காஞ்சா அய்லய்யா எழுதிய "நான் ஏன் இந்த அல்ல" என்ற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தேன்.
            ஐயா நூலை வாங்கிப் பார்த்தார்கள். சிறிய புத்தகம்தான். 150 பக்கங்கள். ஐயா பார்த்தப் பார்வையில் புரிந்து கொண்டேன் அது கனமான புத்தகம் என்று. படித்தால் மனது கனமாகி விடும்.
            பெட்ரண்ட் ரஸ்ஸலின் "நான் ஏன் கிறித்துவன் அல்ல" என்ற நூலைப் பற்றி ஐயா பகிர்ந்து கொண்டார்கள்.
            எங்கள் பேச்சு பா.ஜ. கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன் மொழியப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்தைப் பற்றி திரும்பியது. கவனிக்கத்தக்க மாற்றம்தான் என நான் கருதிக் கொண்டிருந்தேன். காங்கிரஸூம் மீரா குமாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழிந்திருந்த செய்தியும் வந்து கொண்டிருந்தது.
            "குடியரசு தலைவர் வேட்பாளர் இருக்கட்டும், ஒரு புரோகிதராக ஒரு தலித்தை கற்பனை செய்து பார்க்க முடியுமா?" ஐயா கேட்டார்கள்.
            குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு இரு பெரும் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு தலித் வேட்பாளரை முன்னிருத்துகின்றன.
            புரோகிதராக ஒரு தலித்தை முன்னிருத்த இந்த இரு பெரும் கட்சிகளும் என்ன செய்தன?
            நமது அரசியலமைப்புச் சட்டம் அப்படி இருக்கிறது. சமூகச் சட்டம் இப்படி இருக்கிறது.
            இதிலிருந்து தெரிய வருகின்ற உண்மை, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சமூகச் சட்டங்களை மாற்ற எந்த முயற்சியும் செய்யப் போவதில்லை என்பதுதான். அதைச் செய்ய பெரியார்களும், அம்பேத்கார்களும்தான் பிறந்து வந்து கொண்டே இருக்க வேண்டும்.
*****

No comments:

Post a Comment

ஒரு வார்த்தை விசாரிப்பதில் என்ன குறைந்து விடப் போகிறது?

ஒரு வார்த்தை விசாரிப்பதில் என்ன குறைந்து விடப் போகிறது? இந்த உலகில் எதுவும் பழையது இல்லை. எல்லாம் புதுமையானதுதான். புதுமையாக இருக்கும் ஒன்...