14 Jun 2017

கடன் கொண்டார் நெஞ்சம்


கடன் கொண்டார் நெஞ்சம்
புதிதாக டிராக்டர் வாங்கிய போது
சந்தோசமாக இருந்தது
கடைசி இ.எம்.ஐ. கட்டி முடிக்கும் வரை
பயமாக இருந்தது.

லோனைக் கூப்பிட்டுக் கொடுத்த போது
யோசித்திருக்க வேண்டும்
வீடு தேடி வந்து
எடுத்துக் கொண்டு போவார்கள் என்பதை.

வட்டிக்குக் கொடுத்த காசுக்கு
ரெண்டு வீடு கட்டியிருக்கலாம்
இருந்த ஒரு வீட்டையும்
விற்றதுதான் மிச்சம்.

அந்தக் கடனுக்கு
இந்தக் கடன்.
இந்தக் கடனுக்கு
இன்னொரு கடன்.
கடைசியில் எந்தக் கடனுக்கு
எந்தக் கடன்?
கடனை அடைக்க
கடன் கொடுக்க ஆளிருக்கிறார்கள்
என்ன செய்வது?!

கம்பனுக்குத் தெரியாது
கோபித்துக் கொண்டு
கடனைக் கொடுக்காமல்
ஊரை விட்டுப் போக முடியாது.
*****

No comments:

Post a Comment

மகிழ்ச்சியோடு இருக்கும் கலை! The Art of Living Happiness!

நம் முன்னோர்களின் மகிழ்ச்சி ரகசியம்! மகிழ்ச்சியான மக்களுக்கும் மகிழ்ச்சியற்ற மக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுதான் என்ன? இரு வகை மனிதர்கள...