4 Jun 2017

ரயில் பார்த்தல்


நடிப்பு
நடிப்பென்று வந்து விட்டால்
காமிரா முன்னும்  அப்படித்தான்
காவிரி விவகாரத்திலும் அப்படித்தான்
வெளுத்து வாங்கி விடுவார்கள்.
*****

அதைத்தான் செய்வார்கள் என்க!
தத்தெடுத்து வளர்ப்பவர்களும்
அதைத்தான் செய்கிறார்கள்
ஆண் குழந்தைகளாகத் தேர்ந்தெடுத்து.
*****

ரயில் பார்த்தல்
முதல் முறை ரயில் ஓடிய போது
ஊரே கூடி வியப்போடு பார்த்தவர்கள்
மறுபடியும் இப்போதுதான்
ஊரே கூடி வியப்போடு பார்க்கிறார்கள்
காதலித்த இருவர்
ஓடிய ரயில் முன் பாய்ந்து உயிர் விட்டது அறிந்து.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...