25 Jun 2017

மர மண்டைகள்


மர மண்டைகள்
ஆறுகளுக்கு
வண்ணம் பூசினோம்!
குளத் தழும்பை
மறையச் செய்தோம்!
நிலம் சிரித்தால்
குழி விழும் ஏரியை
மறையச் செய்தோம்!
தண்ணீர் பாட்டிலில்
ஊற்றெடுத்து வருவதாக
நம்பிக் கொண்டு
ஆளுக்கு ஐநூறு பாட்டில்கள்
ஆர்டர் செய்து கொண்டு இருக்கிறோம்
பணங்காய்ச்சி மரங்களாகி விட்ட
நம் வேர்கள்
உறிஞ்சுவதற்காக!
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...