கொஞ்சம் சொல்லுங்கள் நண்பர் குழாங்களே!
சங்க இலக்கியங்கள் குறித்தும், அவ்வபோது
வாசிப்பவைகள் குறித்தும் எழுதலாம் என்று இருக்கிறேன்.
மனதில் தடார் தடார் என்று வந்து விழும்
தத்துவங்களும் அதிகமாகிக் கொண்டே போகின்றன. அவைகளையும் அப்படியே கொட்டி விட ஆசை.
சுமார் பத்து, பதினைந்து வருடங்களாக எழுதித்
தீர்த்தவைகளையெல்லாம் ஒவ்வொன்றாக பதிவிட்டு விட்டேன். விரைவில் சரக்கு தீர்ந்து விடும்.
இனி புதிததாக இப்படி எழுதலாம் என்று இருக்கிறேன்.
நீங்களும் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன்.
கேள்விகள் கேளுங்களேன். உரையாடலாம், விவாதம் செய்யலாம்.
நிறைய சின்ன சின்ன கதைகளைப் படித்தும்,
கேட்டும் மனதுக்குள் வைத்திருக்கிறேன். அனைத்தும் அனுபவப் போக்கிஷங்கள். மனதைப் போட்டு
உலுக்கும் அல்லது மனதின் பல கதவுகளைத் திறந்து விடும் விஷேச கதைகள் அவைகள். அவைகளையும்
சொல்ல ஆசை.
எதற்கும் நீங்களும் உங்களுடைய ஆசைகளைச்
சொல்லி விட்டால் எனக்கும் வசதியாக இருக்கும் அல்லவா!
*****
No comments:
Post a Comment