7 Jun 2017

தெருவுக்கு நான்கு பி.இ.க்கள்!


தெருவுக்கு நான்கு பி.இ.க்கள்!
            முன்பெல்லாம் இன்ஜினியரிங் படிக்கிறேன் என்றால் கெத்தாக இருக்கும். உலகத்திலேயே பெரிய படிப்பு அதுதான் என்பது போன்று கிராமத்துப் பெரிசுகள் எல்லாம் கதை அளக்கும். என்னுடைய கனவாகவும் இன்ஜினியரிங் படிப்புக்குச் சற்றுக் கீழான பாலிடெக்னிக் படிப்புதான் இருந்தது.
            இப்போது தெருவுக்கு நான்கு பி.இ.க்கள் ஈக்களைப் போல அலைந்து கொண்டிருக்கின்றன என்று சொல்லும் அளவுக்கு சீப்பாய்ப் போய் விட்டது இன்ஜினியரிங் படிப்பு.
            எவ்வளவோ படிப்புகள் இருக்க, வேலையில்லா பட்டதாரி என்ற படத்தின் மூலம் என்ஜினியரிங் பட்டதாரிகள்தான் அதிகம் வேலையில்லாமல் அலைவதைப் போல அதை வைத்து தனுஷூம் ஒரு படம் எடுத்து விட்டார். அதன் செகண்ட் பார்ட் எடுப்பதாகவும் கேள்வி.
            வெகு சீக்கிரத்தில் இந்த நிலைமை எம்.பி.பி.எஸ். படிப்புக்கும் வந்து விடும் என்று நினைக்கிறேன். நாட்டில் நிறைய தனியார் மெடிக்கல் காலேஜூக்கள் திறக்கப்பட்டுக் கொண்டிருப்பதை விளம்பரங்கள் பறைசாற்றிக் கொண்டு இருக்கின்றன.
            தனியார் கல்லூரிகள் வராவிட்டால் இன்னும் பி.இ. டேக் ஆப்பிலேயே வானத்திலேதான் பறந்து கொண்டிருக்கும். அதை தரை டிக்கெட் அளவுக்கு அடித்து இறக்கி, டவுன் பஸ் ரேஞ்சுக்கு தெருவுக்கு தெரு ஓட விட்டவர்கள் தனியார் கல்லூரிகள்தான்.
            தனியார்மயமாக்கலின் ஒரே நன்மை பி.இ. படிப்பு இந்த அளவுக்கு எளிமையானதுதான். அவர்கள் விரைவில் எம்.பி.பி.எஸ்.ஸையும் அந்த நிலைமைக்கு ஆளாக்காமல் விட மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...