7 Jun 2017

காம்பெளண்ட் நடுதல்


காம்பெளண்ட் நடுதல்
நட்டு வைக்கும்
நாமே வெட்டுவோம்
எனத் தெரியாது
வாசலுக்கு முன் வளர்ந்து நிற்கும்
வேப்ப மரத்திற்கு.
*****

வாழ்தல்
எல்லாரும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
ஆனால்,
அது பிச்சைக்காரர்கள் வாழ்வாக இருக்கிறது
பணக்காரர்கள் வாழ்வதாக இருக்கிறது
நடுத்தர மக்கள் வாழ்வதாக இருக்கிறது
எல்லாரும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
அது பணக்காரனைப் பிச்சைக்காரனாக்கும்
பிச்சைக்காரனைப் பணக்காரனாக்கும்
எல்லாரும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
என்பது புரிய உங்களுக்கு நாளாகும்.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...