4 Jun 2017

ஊர்ப் பொது டீக்கடை


அதுவரை
அவர்கள் நதிநீர் ஆணையம் அமைப்பார்கள்
அதுவரை நாம்
ஆற்று மணல் அள்ளிக் கொண்டிருப்போம்
பின்னொரு காலத்தில்
ஆற்றில் நீர் வரும் போது
மணல் வரவில்லை என்று
உச்சநீதி மன்றம் நாடி வழக்குத் தொடுப்போம்
நமது ஆட்டை நாமே
அய்யனாருக்கு அறுத்தால்
யாரும் நம் மேல் வழக்குத் தொடுக்க முடியாது
என்பது போல
நமது ஆற்றையும்
அவ்வாறே செய்து முடிப்போமாக! ஆமென்!
*****

ஊர்ப் பொது டீக்கடை
ஒரே டீக்கடையில்
மேலத்தெரு செளந்தர் பாண்டிக்கு
க்ளாஸில் டீ
கீழத்தெரு கிட்டானுக்கு
காகிதக் கோப்பையில் டீ.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...