4 Jun 2017

நமது நாகரிகம் வளரும் கதை


நமது நாகரிகம் வளரும் கதை
            டிபார்ட்மெண்ட் ஸ்டோர்
            சூப்பர் மார்கெட்
            என்று ஆரம்பித்து மல்டிப்ளெக்ஸில் எல்லாவற்றையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தார்கள். அங்கே உள்ளே புகுந்தால் ஜட்டியிலிருந்து பெரிய கடாச் சட்டி வரை எல்லாவற்றையும் வாங்கி விடலாம்.
            அண்மையில் நண்பர் ஒருவர் அழைத்ததன் பேரில் அவரது மகனை ப்ளஸ் ஒன்னில் சேர்க்க வெளிமாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு செல்ல நேரிட்டது.
            அதை பள்ளி என்று சொல்வது கூட தவறு. எல்.கே.ஜி.யில் ஆரம்பித்து ஸ்டேட் போர்டு, சி.பி.எஸ்.இ., பாலிடெக்னிக், ஆர்ட்ஸ் காலேஜ், இன்ஜினியரிங் காலேஜ் என்று எல்லாவற்றையும் அன்டர் ஒன் ரூப்பில் வைத்திருந்தார்கள். (அவ்வளவுக்கும் எப்படி அனுமதி வாங்கினார்களோ?) அப்படியென்றால் அதற்கு என்ன பெயர் சூட்ட வேண்டும் நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.
            குழந்தையைப் பெற்று அங்கே கொண்டு போய் போட்டு விட்டால், அது என்ன வேலைக்குப் போக வேண்டுமோ அதை படித்து விட்டு வெளியே வந்து விடும்.
            இப்படி பள்ளி முதல் கல்லூரி வரை ஒரு காம்பெளண்டுக்குள் நடத்துபவர்கள் அப்படியே,
            மேட்ரிமோனியல்,
            கல்யாண மண்டபம்,
            பிரசவ ஆஸ்பத்திரி,
            மளிகைக் கடை,
            காய்கறிக் கடை,
            மெடிக்கல் ஸ்டோர்,
            தியேட்டர்,
            தகன மேடை என்று அந்த காம்பெளண்டுக்குள் கொண்டு வந்து விட்டால் அங்கேயே பிறந்து அங்கேயே இறந்தும் விடலாம். (இந்த ஐடியாவை கல்வித் தந்தைகள் காப்பி அடித்து விடுவார்களோ என்ற பயமும் இருக்கிறது. இந்த ஐடியாவிற்கு எப்படி காப்புரிமை பெறுவது தெரிந்தவர்கள் சொன்னால் நலமாக இருக்கும்)
            நல்லதுதான் என்கிறீர்களா?
            அதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும். ஆம், நண்பர் தன் மகனைப் ப்ளஸ் ஒன் சேர்க்கக் கொடுத்த கல்விக் கட்டணம் ஒரு லட்சத்து எண்பதாயிரம். ப்ளஸ்டூவுக்கு அது ஒரு தனித்தொகை அடுத்த ஆண்டு கட்ட வேண்டுமாம்.
            இப்போது மேலே உள்ள முதல் பாராவைப் படித்து பாருங்கள். முடிச்சு உங்களுக்கு விளங்கும். இப்படிதான் நண்பர்களே நம் நாகரிகம் வளர்ந்து கொண்டிருக்கிறது.
*****

No comments:

Post a Comment

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும்

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும் உண்மை பொய் ஏமாற்றம் நியாயம் எப்போதும் வெளியில் சொல்ல முடியாத ஒரு பட்டியல் இருக்கிறது ஏம...