24 Jun 2017

டமிங்கிலிஷ் வழிக் கல்வி!


டமிங்கிலிஷ் வழிக் கல்வி!
            தமிழர்கள் இந்தியை எதிர்த்தார்களே தவிர, தமிழை ஆதரிக்கவில்லை. இதற்காக நீங்கள் கோபப்பட்டால், அப்புறம் உங்கள் குழந்தைகளைத் தமிழ்வழிக் கல்வியில் சேர்க்கும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு விடும்.
            இன்றைய இணைய யுகத்தில் தமிழை ஆதரிக்கிறேன் என்று சொல்லி விட்டு, உங்கள் குழந்தைகளை ஆங்கில வழியில் சேர்த்து இருந்தீர்கள் என்றால் தொலைந்தீர்கள், அதற்கான ஆதாரத் தரவுகளைப் போட்டோவுடன் போட்டு நாறடித்து விடுகிறார்கள்.
            சரி, ஆங்கிலமாவது தமிழ் நாட்டில் உருப்பட்டதா என்றால் அப்படியும் தெரியவில்லை. பக்கத்து வீட்டுப் பாப்பாவைக் கூப்பிட்டு வைத்து அதன் ஆங்கில வழிப் புத்தகத்தை வைத்துக் கேட்டால், அது ஆங்கிலத்தைப் படித்து தமிழில் விளக்கம் சொல்லிக் கொண்டு இருக்கிறது. அப்படித்தான் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்கிறது பாப்பா.
            அதற்காக தமிழர்களுக்கு தமிழின் மீதும் பற்றில்லை, ஆங்கிலத்தின் மீதும் பற்றில்லை என்றெல்லாம் சொல்லி விட முடியாது. அவர்கள் வேலை வாய்ப்பின் மீதான ஒரு பற்றின் காரணமாக ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ள பிரயாசைப் படுகிறார்கள்.
            ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டால் வேலை வாய்ப்பைப் பெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள். இங்கிலீஷ் பேசும் நாட்டிலும் வேலையில்லாத் திண்டாட்டங்கள் இருக்கின்றன என்பதை தமிழர்களுக்கு யாராவது புரிய வைத்தால் தேவலாம்.
*****

No comments:

Post a Comment

இப்படித்தான் எல்லாம்!

இப்படித்தான் எல்லாம்! இப்படித்தான் வழங்கப்படுகின்றன இலவசங்கள் ஒரு தோடு வாங்கினால் இன்னொரு தோடு இலவசம் அதிர்ஷ்ட நாட்கள் இப்படித்தான் கண...