3 Jun 2017

அம்முக்குட்டி ஒரு டீச்சர்


அம்முக்குட்டி ஒரு டீச்சர்
பள்ளிக்குப் போக
அடம் பிடிக்கும் அம்முக்குட்டி
அடிக்கடி விளையாடுவது
டீச்சராகிப் பாடம் நடத்துவதுதான்.
*****

புற்றைக் கொன்ற வீடு
அடிக்கடி வீட்டில் நுழையும்
பாம்பு
அதன் வீட்டைத் தேடிக் கொண்டிருக்கலாம்.
*****

சாதனையாளர்
வாழ்நாள் சாதனையாளர்
என்கிறார்கள்
முப்பது வயதில் விவாகரத்து வாங்கி
அறுபது வயதைத் தாண்டியும்
நடித்துக் கொண்டிருப்பவர்களை.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...