3 Jun 2017

இப்படிக்கு வேட்பாளர்!


இப்படிக்கு வேட்பாளர்!
            சமத்து சம்புலிங்கம் தேர்தலில் வேட்பாளராக நின்றார்.
            சொன்ன சொல்லுக்கும், கொடுத்த வாக்குக்கும் பேர் போனவர் அவர். இன்றைக்கு ஒரு சொல், நாளைக்கு ஒரு சொல் என்று அவரிடம் பார்க்க முடியாது. ஒரு சொல்தான், நின்னு பேசும் அவரை.
            "ஒரு ஓட்டுக்கு ஆயிரமோ, ரெண்டாயிரமோ, ஐயாயிரமோ என்ன செய்யணும்னு இப்பவே சொல்லிடுங்க!" என்றார் சம்புலிங்கம்.
            "ஏண்ணே இப்படிச் சொல்றீங்க? நீங்களா எவ்வளவு செஞ்சாலும் பரவாயில்ல!" என்றனர் மகாஜனங்கள்.
            "அதுக்கில்லே! எதுவா இருந்தாலும் என்ன செய்யணும்னு தேர்தலப்பவே சொல்லிடுங்க. தேர்தலில்ல ஜெயித்ததுக்கு அப்புறம் எதுவும் செய்யலீன்னு வருத்தப்படாதீங்க!" வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுன்னு போட்டு முடித்தார் சம்புலிங்கம்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...