5 Jun 2017

அவ்வபோது சில ஞாபகங்கள்


அவ்வபோது சில ஞாபகங்கள்
மழை வெள்ளம் பெருகும் போது
ஆற்றின் ஞாபகம் வருகிறது.
குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடும் போது
மணலின் ஞாபகம் வருகிறது.
கொளுத்தும் வெயிலில் அலையும் போது
மரத்தின் ஞாபகம் வருகிறது.
ஒரு கிலோ அரிசி விலை கேட்கும் போது
வயலின் ஞாபகம் வருகிறது.
ஞாபகங்கள் வருவதோடு சரி
அப்போதைக்கப்போது மறந்தும் போய் விடுகின்றன
பரீட்சைக்குப் படித்து வைத்த பதிலைப் போல.
*****

அன்பின் உருவம்
ஒரு கொலைக்குப் பின்
அன்பின் உருவமாக மாறியிருந்தார்
சிறையில் இருக்கும் சித்தப்பா.
*****

No comments:

Post a Comment

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும்

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும் உண்மை பொய் ஏமாற்றம் நியாயம் எப்போதும் வெளியில் சொல்ல முடியாத ஒரு பட்டியல் இருக்கிறது ஏம...