5 Jun 2017

(மனோ) பாவ மனிதர்கள்!


(மனோ) பாவ மனிதர்கள்!
            அடிப்படை மனோபாவத்திலிருந்து மனுசனை மாற்றுவது லேசுபட்ட காரியமல்ல என்றுதான் தோன்றுகிறது.
            கஞ்சனாக இருக்கும் ஒருவரை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன சொன்னாலும்,‍ செய்தாலும் சரிதான், தலைகீழாக நின்னு தண்ணி குடித்தாலும் அவரை மாற்ற முடியாது.
            அதே போல சாதிப்பற்றோடு திரியும் ஆசாமிகளை எடுத்துக் கொண்டால் அவர்கள் தேகம் கட்டையில் வெந்தாலும், அவர்களது சாதிப்பற்றை ஆசிட்டை ஊற்றி தீய்த்தாலும் தீயாது. ஆசிட் தீய்ஞ்சு சுண்ணாம்பாகி விடும்.
            நாரத கலகம் செய்யும் நண்பர்களை எடுத்துக் கொள்ளுங்கள். "நானும் மாறணும்னுதான் நினைக்கிறேன், எனக்கும் தப்புன்னுதான் தெரியுது, ஆனா மாற முடியலயே!" என்று நமக்குத் தகுந்தாற் போல பேசி விட்டு, அடுத்தவர்களிடமும் போய் அவர்களுக்குத் தகுந்தாற் போல் பேசி விட்டு, ஒரு வெடிகுண்டை வைத்து விட்டுப் போய் விடுவார்கள்.
            தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது போல சில மனோபாவங்கள் கட்டையிலதான் வேகணும் என்பார்கள். ஒண்ணு கட்டையில வெந்தால், நூறு அது மாதிரி பிறப்பெடுக்கிறதை என்ன சொல்ல?
            நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரின்னு சூப்பர் ஸ்டார் பஞ்ச் அடிப்பாரே! மனசுக்குக் கொஞ்சம் பாரம் குறைய, பஞ்சு போல லேசாக, ஆறுதலுக்கு அந்த பஞ்சையே நினைத்துக் கொள்ள!
*****

No comments:

Post a Comment

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும்

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும் உண்மை பொய் ஏமாற்றம் நியாயம் எப்போதும் வெளியில் சொல்ல முடியாத ஒரு பட்டியல் இருக்கிறது ஏம...