25 Jun 2017

கெத்து


கெத்து
            "எனக்குத் தெரியாமா எவனும் எங்கேயும் கொள்ளையடிச்சிடலாம்னு பகல் கனவு காணாதீங்க?" பிடிபட்ட கொள்ளையர்களிடம் கெத்து காட்டினார் பங்கு பிரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர்.
*****
வேண்டுகோள்
            பத்து வருடத்துக்குக் காணாமல் போன மகன் பேஸ்புக்கில் பிரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்திருந்தான் தண்டாபணிக்கு.
*****
பதிவும் முடிவும்
            "எங்கிருந்தாலும் வாழ்க!" தன்னை விட்டு பிரபுவோடு ஓடிப் போன காதலிக்கு பதிவிட்டு பேஸ்புக் அக்கெளண்டை குளோஸ் செய்தான் அர்விந்த்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...