5 Jun 2017

கடைசி விவசாயி


கடைசி விவசாயி
விவசாயம் செய்வதா
வியாபாரம் செய்வதா
என்ற கேள்வி வந்த போது
ரோட்டோரம் ஒட்டியிருந்த நிலத்தில்
அரிசிக்கடை ஆரம்பித்து
பின்னால் இருந்த நிலத்தில்
விவசாயம் செய்ய ஆரம்பித்தார்
கிராமத்தின் கடைசி விவசாயி.
அந்தக் கடைசி விவசாயியும்
செத்தப் பிறகு
எம்.பி.பி.எஸ்., என்ஜினியரிங்
மெளசு குறைந்து
அக்ரி கல்லூரி என்ட்ரன்ஸ்க்கு
கோச்சிங் கிளாஸ்க்கு போய்க் கொண்டிருந்தனர்
ப்ளஸ்டூ மாணவர்களுக்கு
உலகம் தழுவிய என்ட்ரன்ஸ் நடத்துவதற்கு
பரிசீலனை செய்து கொண்டிருந்தது
ஐ.நா. சபை.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...