5 Jun 2017

புத்திமான் பலவான் ஆவான்!


புத்திமான் பலவான் ஆவான்!
            ஒன்றாகப் படித்து, ஒன்றாகத்தான் பணியில் சேர்ந்தோம் நானும் என் நண்பனும். இருவரும் பணியில் சேர்ந்த நிறுவனங்கள் மட்டும் வேறு.
            பணியாற்றிய இந்தப் பத்தாண்டுகளில் நண்பன் அடைந்த உச்சம் பெரிது. பெரிய பெரிய அதிகாரிகளுடன் எல்லாம் அசால்ட்டாக பேசிக் கொண்டு இருக்கிறான். டெல்லி வரை போய் செமினார் எல்லாம் எடுத்திருக்கிறான். நான் பொருட்காட்சியில் விற்கும் டெல்லி அப்பளம் சாப்பிடதோடு சரி.
            அவனது வேகமும் உயர்வும் ஒரு தனியார் பேருந்தின் வேகத்திற்கு ஒத்தது. எனது வேகம் நம் ஊர் டவுன் பஸ் கணக்காக தடதட, லொடலொட கணக்குதான்.
            ஒருநாள் செல்பேசியில் அழைத்தவன் அவனுக்கும், அவனது நிறுவனத்தில் பணியாற்றும் இன்னொருவனுக்கும் இடையே நடக்கும் பனிப்போர் பற்றிச் சொன்னான். அவன் சொல்ல அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் நடக்கும் பனிப்போரே பரவாயில்லை என்பது போலிருந்தது.
            அவனால் இவனுக்கு டென்ஷன் ஆனால் இவன் மெடிக்கல் லீவ் போட்டு விடுகிறானாம். இவனால் அவனுக்கு டென்ஷன் ஆனால் அவன் மெடிக்கல் லீவ் போட்டு விடுகிறானாம்.
            இப்படி இவன் பாதி நாள் நிறுவனத்தில் இருந்தால், அவன் பாதி நாள் நிறுவனத்தில் இருப்பதில்லையாம்.
            இந்த ரெண்டு மகா பெரிய திறமை மற்றும் புத்திசாலிகளை வேறு வழியில்லாமல் நிறுவனமும் பொறுத்துக் கொண்டு போகிறதாம். இவர்களை விட்டால் இது போன்று சண்டையிட வேறு இருவர்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதால் கூட இருக்கலாம்.
            என்னைக் கேட்டான் நண்பன், "நீ மெடிக்கல் லீவ் போட்டு இருக்கிறாயா?" என்று. "போடணும்னு ஆசையாத்தான் இருக்கு. போட்டா வேலையை விட்டு தூக்கிடுவானுங்களோன்னு பயமாவும் இருக்கு!" என்றேன்.
*****

No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...