7 Jun 2017

பூச்சிக் கத்திரிக்காய்


பூச்சிக் கத்திரிக்காய்
பூச்சிக் கத்திரிக்காய்
தப்பித்துக் கொண்டது பூச்சி
வாங்கி வந்தவரை மாட்டி விட்டு விட்டு.
*****

இடம் பொருள் என்பது...
வீடெங்கும் உடைந்த நாற்காலிகள் ஆங்காங்கே
பழைய கம்ப்யூட்டர்கள், டி.வி. பெட்டிகள் லாப்டுகளில்
பழைய கால்குலேட்டர்கள், செல்போன்கள்,
வீடியோ கேம் விளையாடிய சாதனங்கள் அலமாரிகளில்
எப்போதோ எதற்காகவோ வாங்கி வைத்த சி.டி.க்கள்,
நடைபயிற்சி இயந்திரம், மிதிவண்டி மற்றும் மருந்து பாட்டில்கள்,
கிப்டுகள் என்ற பெயரில் குவிந்து கிடக்கும்
படங்கள், ப்ளாஸ்குகள், பொம்மைகள், கண்ணாடிப் பொருள்கள்
இப்படி இன்ன பிற இடமிருக்கும் வீட்டில்
தாத்தாவுக்கான இடம் மட்டும் முதியோர் இல்லத்தில்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...