7 Jun 2017

தலைவர் எங்கிருக்கிறார் தெரியுமா?


தலைவர் எங்கிருக்கிறார் தெரியுமா?
            "எங்க தலைவர் சலக ராஜதந்திரங்களையும் கரைச்சுக் குடிச்ச சகலவல்லவர் தெரியுமா! எங்கேயும் செல்வாக்கோடு கெத்தா இருப்பார்!" என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஜோதிலிங்கம் சொன்னதைப் பொருட்படுத்த முடியாமல்,
            "எங்க தலைவர் கடவுள் மாதிரி! தூணுலயும் இருப்பார், துரும்புலயும் இருப்பார்!" என்றார் சமத்து சம்புலிங்கம்.
            "ஆச்சரியமா இருக்கே. தூண்லயும், துரும்புலேயும் இருக்க அவர் என்ன ஒட்டடையா இல்ல அழுக்கா? இப்போ எங்க இருக்கார்னு உன்னால காட்ட முடியுமா?" என்று நக்கலடித்தார் ஜோதிலிங்கம்.
            சம்புலிங்கத்துக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. "ஏன் காட்ட முடியாது? அவர் தூண்லயும் இருப்பார், துரும்புலயும் இருப்பார். அவர் நினைச்சா ஜெயில்லயும் இருப்பார். இப்போ ஜெயில்ல இருக்கார்!"
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...