7 Jun 2017

வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு நேரும் சோதனைகள்


வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு நேரும் சோதனைகள்
            ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் சவால் விட்டு அதை நிரூபித்து விட்டது என்று சொல்வதற்கில்லை என்றாலும், அந்தச் சவாலை எந்தக் கட்சியும் ஏற்று நிரூபிக்கத் தயாராக இல்லை என்பதால், நிரூபித்து விட்டது என்று சொல்வதில் தவறேதும் இல்லை.
            எழுத்தாளர் சுஜாதாவும் இதே கருத்தை அழுத்தம் திருத்தமாக அவருக்கே உரிய அறிவியல் அறிவோடு கூடிய சங்கதிகளோடு விளக்கிச் சொல்லியிருக்கிறார். அந்த ஓட்டுப்பதிவு இயந்திரத்தை உருவாக்கிய பொறியாளர் வகையறாக்களில் அவரும் ஒருவர்.
            சவால் விட்ட கட்சிகள் பல ஏன் சவாலில் கலந்து கொள்ளவில்லை என்பது இந்தியத் தேர்தல் முடிவுகளைப் போன்று புரியாத ஒன்று. பங்கேற்ற ஒரு சில கட்சிகளும் சவாலுக்குச் சலாம் போட்டு விட்டு, தேர்தல் ஆணையம் செய்து காட்டிய செயல்முறை விளக்கத்தை மட்டும் செம்மாந்த நிலையில் வேடிக்கைப் பார்த்து விட்டு, பம்மாத்து வாங்கி விட்டன.
            பி.ஜே.பி. ஜெயித்தால் வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீது காங்கிரஸ் சந்தேகப்படுவதையும், காங்கிரஸ் ஜெயித்தால் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது பி.ஜே.பி. சந்தேகப்படுவதையும் பார்த்தால், ஜெயிப்பதும் தோற்பதும் பிரச்சனையா? வாக்குப்பதிவு இயந்திரத்தில் பிரச்சனையா? என்பது வெளிப்படையாகப் புரியும்.
            தேர்தல் ஆணையம் ஒரு விசயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். டெக்னாலஜி வளர்ந்து கொண்டிருக்கும் வேகத்தைப் பார்க்கையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்பில்லை என்று இதை அப்படியே விட்டு விடவும் வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை டெக்னாலஜியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து தொடர்ந்து அப்டேட் செய்து கொள்வது தேர்தல் ஆணையத்துக்கு அவசியமாகிறது.
*****

No comments:

Post a Comment

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும்

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும் உண்மை பொய் ஏமாற்றம் நியாயம் எப்போதும் வெளியில் சொல்ல முடியாத ஒரு பட்டியல் இருக்கிறது ஏம...