6 Jun 2017

கவிக்கோ மறைந்து விட்டார்!


கவிக்கோ மறைந்து விட்டார்!
            கவிக்கோ அப்துல் ரகுமானின் மரணம் தமிழ்ப் புதுக்கவிதை உலகுக்கு பேரிழப்பு. அவருடைய கவிதைகளைப் படித்து கவிஞர்கள் அல்லாதோர் எனக் கருதிக் கொண்டிருந்தோரும் கவிஞர்கள் ஆனது வரலாறு.
            அவரது குறியீடுகள், படிமங்கள் இன்னும் எப்போதும் ஆச்சர்யம் தருபவை. சமூக எதார்த்தங்களை வார்த்தைகளின் வழியே மாறுபட்ட கோணத்தில் கண்ட கலகக்காரர்.
            புத்தகங்களே
            புத்தகங்களே
            குழந்தைகளைக்
            கிழித்து விடாதீர்கள்!
என்று அவர் எழுதிய வரிகள் எத்தனை நிதர்சனமானவை. புத்தகங்கள் கிழித்து போட்ட மிச்சங்களாய்க் குழந்தைகள், நீட் தேர்விற்காக முழுக்கைச் சட்டைகளை, அரைக்கைச் சட்டைகளாய்க் கிழித்துக் கொண்டு அலைந்த போது கவிக்கோதான் மனதில் வந்தார்.
            ஆண் நபி இருக்கும் போது, ஏன் பெண் நபி இல்லையென்று மகள் கேட்பதாக ஒரு கவிதை எழுதியிருந்தார் ஹெச்.ஜி.ரசூல் தனது மைலாஞ்சி எனும் கவிதைத் தொகுப்பில். அதற்காக ஜமாத்தால் அவர் ஊர் விலக்கம் செய்யப்பட்டு இருந்தார். அப்போது ஹெச்.ஜி.ரசூல் மிகவும் வருத்தப்பட்டுச் சொன்னார், தான் ஜமாத்தால் ஊர் விலக்கம் செய்யப்பட்டிருப்பதைப் பற்றி கவிக்கோ எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்று வேதனையோடு. அது தவிர்த்துப் பார்த்தால் கவிக்கோவின் மீது பெரிய குற்றச்சாட்டுகள் எதுவும் கிடையாது என நினைக்கிறேன்.
            அன்று ஹெச்.ஜி.ரசூல் வருந்திய வருத்தத்தை விட இன்று அதிகம் வருந்துகிறேன் கவிக்கோவின் மறைவுக்கு.
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...