6 Jun 2017

ஒரு எண்ணமும், இரு நாய்களும்


ஒரு எண்ணமும், இரு நாய்களும்
காணாமல் போன நாயை
ஒரு வாரம் தேடினேன்
பிறிதொரு நாய் வாங்கி
வளர்க்க ஆரம்பித்த வாரத்தில்
காணாமல் போன நாய் திரும்பி வந்தது.
காணாமல் போன நாய்
காணாமலே போயிருக்கக் கூடாதா
என்று தோன்றியது
இரண்டு நாய்களும் சண்டையிட்ட
ஒரு பொழுதில்.
*****

கண்டுபிடிப்புகள்
காணாமல் போய் வீடு திரும்பிய தாத்தா
கண்டுபிடித்துக் கொடுத்த
தெற்குத் தெரு மாரியப்பனை
தினம் தினம் திட்டிக் கொண்டிருக்க,
தெற்குத் தெரு மாரியப்பனோ
தீபாவளி, பொங்கல் என்றால்
கிடைக்கும் பத்து ரூபாய் இனாம்
இனி இருபதாகும் என்ற நினைப்பிலே
தீபாவளியை நோக்கி இருக்கின்றான்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...