6 Jun 2017

தீவிரவாதமும், முடியாதுகளும்!


தீவிரவாதமும், முடியாதுகளும்!
            தீவிரவாதத்தை முற்றிலும் அழித்து விட்டால்...
            கமாண்டோ படைகளை வைத்துக் கொள்ள முடியாது.
            அணுகுண்டுகளை உருவாக்க முடியாது.
            அதை ஒரு காரணமாகக் காட்டி மற்ற நாடுகளின் மீது போர் தொடுக்க முடியாது.
            பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியாது.
            ஆயுத விற்பனையை நிகழ்த்த முடியாது.
            உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி அரசியல்வாதிகள் தேசிய உணர்வை தட்டி எழுப்ப முடியாது.
            தீவிரவாதத்தை வேரறுப்பேன் என்று கூறி எந்த அரசியல்வாதியும் ஆட்சியைப் பிடிக்க முடியாது.
            ராணுவ செலவினத்தை உயர்த்த முடியாது.
இவ்வளவு முடியாதுகள் இருக்கின்றன தீவிரவாதத்தை முற்றிலும் அழித்து விட்டால். இப்போது சொல்லுங்கள் உலகப் பெருந்தலைவர்களும், சிறு மற்றும் குறுந்தலைவர்களும் தீவிரவாதத்தை அழிப்பார்கள்?! அவர்கள் தலைவராக இருக்க திட்டமிட்டே தீவிரவாதத்தை வளர்த்தாலும் வளர்ப்பார்களே தவிர, அழிக்க மாட்டார்கள்.
            தீவிரவாதத்தால் எந்தத் தலைவர்களும் சாக மாட்டார்கள் என்பது அவர்களுக்கு (தலைவர்களுக்கு) நன்றாகத் தெரியும். அப்பாவி பொதுமக்கள்தான் சாவார்கள் என்பதும் அதன் மூலம் ஓர் அனுதாப அலையை எழுப்பி ஆட்சியைப் பிடிப்பதும், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதும் ஆகிய பகடைக் காய்களை அப்போதுதான் உருட்ட முடியும் என்பது அவர்களுக்கு பாலபாடம். நம்முன் தலைவர்கள் போடுவதெல்லாம் வெறும் வேடம்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...