6 Jun 2017

அரிவாள்களை வெட்டி விடும் வேர்கள்


அழியாதது அதுவென...
எரிப்பதால் நின்று விடாது
புகையைப் போல கிளம்பும்
புதைப்பதால் புதைந்து விடாது
விருட்சம் போல முளை விடும்
சாதியைத் தாண்டும் காதல்.
*****

அரிவாள்களை வெட்டி விடும் வேர்கள்
யாராவது புரிய வைத்தால் தேவலாம்
கெளரவக் கொலைகள்
கிளைகளைக் கழிக்கலாம்
வேர்களை ஒன்றும் செய்ய முடியாது என.
*****

காணவில்லை
ஆற்றோரம் இருந்த மரத்தையும் காணவில்லை
ஆற்றையும் காணவில்லை
மணல் அள்ளும் லாரி வந்த பிறகு.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...