24 Jun 2017

தேவதூதராக அமைவதாக


தேவதூதராக அமைவதாக
ஒரே அபார்ட்மெண்டில்
சேர்ந்துவாழத் தொடங்கிய பிறகு
இருவருக்கும் தினம் தினம்
சண்டை எழத் தொடங்கியது
உருகி உருகி காதலித்தவர்களா நாம் என்று
அவர்கள் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்
தனித்தனியாக இருப்பதே நல்லது என
ஆளுக்கொரு அபார்ட்மெண்டில் குடியேறிக் கொண்டார்கள்
அப்போதும்
அவன் அபார்ட்மெண்டுக்கு அவளும்
அவள் அபார்ட்மெண்டுக்கு அவனும் சென்று
அவ்வபோது சண்டை போடுவது தொடரவே
பரஸ்பரம் விவாகரத்து வாங்கிக் கொண்டார்கள்
பிறகு சில நாள்களில்
அபார்ட்மெண்ட் வாடகை கொடுப்பது சிரமமாக
இருப்பதாகத் தோன்றவே இருவரும்
ஒரே அபார்ட்மெண்டில் சேர்ந்து இருக்கலாம் எனத்
தீர்மானித்துக் கொண்டார்கள்
ஒரே அபார்ட்மெண்டில் இருப்பதன்
செளகரியத்தை உணரத் தொடங்கியதும்
தங்கள் சண்டைகளைத் தவிர்க்கும்
தேவதூதராக அமைவதாகட்டும் என
அவர்கள் முதல் வேலையாக
ஒரு குழந்தை பெற்றுக் கொண்டார்கள்
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...