3 Jun 2017

என்ன கொடுமை கடவுளே!


வேண்டுதல்
கர்த்தரே!
என் வேண்டுதல்கள் எல்லாம்
பொட்டப் புள்ளைன்னு தெரிஞ்சிருந்தா
கலைச்சிருப்பேன்
என்பவளுக்கு
அவளைப் பொட்டப் புள்ளைன்னு
கலைக்காத அவள் அம்மாவின் ஞாபகம்
வாழ்வில் ஒருமுறை வந்து விட்டுப் போவதாக.
*****

என்ன கொடுமை கடவுளே!
சிவனுக்கு இரண்டும் ஆண் பிள்ளைகள்
திருமாலுக்கும் ராம அவதாரத்தில் அப்படியே
புத்தனுக்குப் பிறந்தது ஓர் ஆண் குழந்தை
ஏசுவுக்குப் பெண் குழந்தை பிறந்து விடுமோ என்று
முன்கூட்டியே சிலுவையில் அறைந்து முடித்தனர்
என்ன கொடுமை கடவுளே
பெண் தெய்வங்கள்
அவர‍வர்களாகவே உருவாகிறார்கள்
எந்தத் தெய்வத்துக்கும் பிறக்காமல்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...