23 Jun 2017

இப்படியும் கழியும் வாழ்க்கை


இப்படியும் கழியும் வாழ்க்கை
பூட்டிய வீட்டில்
மகனை அடைத்து விட்டுச் செல்கிறேன்
கார்டூன் சேனல்களை ஓட விட்டு.
மாலை வரும் வரை
அவன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பான்
சலிப்படைந்தால் மொபைல் கேம் விளையாடிக் கொள்வான்
இடையிடையே மொபைலில் அழைத்து
அவன் நிலை அறிந்து கொள்வேன்
பசிக்கும் போது ப்ரிட்ஜைத் திறந்து கொரிப்பதோ
ஹாட் பாக்ஸைத் திறந்து உண்பதோ
அவன் விருப்பம்
மாலை வீடு திரும்பும் போது
அம்மா என்று அவன் தழுவிக் கொள்வதில்லை
நானும் மகனே என முத்தமிடுவதும் இல்லை
அவரவர் களைப்பில் உறங்கிக் கொண்டிருப்போம்
மறுநாள் விழிப்பதற்கு!
*****

No comments:

Post a Comment

குழு அமைக்கும் நேரம்!

குழு அமைக்கும் நேரம்! முடியும் என்றும் சொல்ல முடியாது முடியாது என்றும் சொல்ல முடியாது அப்போது அம்மா பிள்ளைகளிடம் சொல்வாள் “அப்பாவிடம...