20 Jun 2017

கொஞ்சம் பார்த்து செய்யுங்கள்!


கொஞ்சம் பார்த்து செய்யுங்கள்!
            நடிகர்களின், நடிகைகளின் வாரிசுகள் சினிமாவுக்கு வருவதைப் பத்திரிகைகள் வரிந்து கட்டிக் கொண்டு எழுதித் தள்ளுகின்றன. அவர்களின் புகைப்படங்களாகப் போட்டு படிப்பவனின் சிந்தனையில் கரியைப் பூசுகின்றன.
            அடிமட்டத்திலிருந்து அரசியலுக்கு வரும் ஒருவனை, சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் ஒருவனை, விளிம்பு நிலை மனிதர்களுக்காகப் போராடும் ஒருவனை பத்திரிகைகள் கண்டு கொள்வதில்லை. அப்படியே கண்டு கொண்டாலும், அவர் எத்தனை நபர்களால் அறியப்பட்டுள்ளார்? அவரைப் பிரசுரித்தால் எத்தனை பிரதிகள் கூடுதலாக விற்கும்? என்று சர்குலேஷன் வெயிட்டேஜ் பார்த்த பிறகுதான் செய்கிறார்கள்.
            இன்னும் நிறைய உண்மைகள் வெளிச்சத்துக்கு வராமலே இருட்டுக்குள்ளே கிடக்கின்றன. இருளின் மறைவில் இருக்கும் பரம்பரைகள் நிறைய. அவர்களின் வாரிசுகளையும் பத்திரிகைகள் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்.
            கொஞ்சம் பார்த்து செய்யுங்கள்!
*****

No comments:

Post a Comment

நீயும் என் தமிழனே! நீயும் என் இந்தியனே!

நீயும் என் தமிழனே! நீயும் என் இந்தியனே! இருக்கின்ற வேலைகளை தனியார் ஒப்பந்த வேலைகளை விடுவதற்கு நிரந்தரப் பணிகளைத் தற்காலிகப் பணிகளாக ...