17 Jun 2017

அரசுப் பள்ளிகளின் மேம்பாடு


அரசுப் பள்ளிகளின் மேம்பாடு
            மனிதன் சமூக கெளரவத்திற்காகப் போராடும் ஒரு பிராணி. அந்த சமூக கெளரவத்தை எப்பேர்பாடு பட்டாவது அடைய நினைப்பவன். அதை  தான் அடையா விட்டாலும், தன் பிள்ளைகளாவது அடைய வேண்டும் என்ற வேட்கையோடு திரிபவன்.
            சமூக கெளரவம் தொடர்பான மக்களின் எண்ணப் போக்குதான் அவர்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க தடையாக அமைகிறது. அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதைத் தாழ்வாகவும், தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதை உயர்வாகவும் கருத வைக்கிறது.
            கல்வி என்பதன் நோக்கம் உயர்வு, தாழ்வைப் போக்குவதும், சமத்துவத்தை உருவாக்குவதும் ஆகும். பள்ளிச் சேர்க்கையிலே இப்படி உயர்வு, தாழ்வு உருவாகி விட்டால் கல்வியின் அடிப்படை நோக்கம் ஆரம்பத்திலேயே அல்லவா அடிபடுகிறது.
            இனி அரசுப் பள்ளிகளை மீட்டு எடுக்க வேண்டும் என்றால் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று சொல்பவர்கள் கூட, தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில்தான் கொண்டுபோய் சேர்க்கிறார்கள்!
            யாரும் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் கொண்டு போய் சேர்க்காவிட்டால், இழுத்து மூடப்படும் தனியார் பொறியியல் கல்லூரிகளைப் போல தனியார் பள்ளிகளும் தானாக இழுத்து மூடப்படும் என்பதுதான் எதார்த்தம்.
            இப்போதைய நிலைக்கு தனியார் பள்ளிகளை இழுத்து மூடுவது என்பதெல்லாம் சாத்தியம் இல்லை. இழுத்து மூடுவதற்கான சட்டங்களை இயற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் தனியார் பள்ளிகளின் கல்வித் தந்தைகளாக இருப்பது நாடறிந்த விசயம்.
            என்ன செய்யலாம்? அரசுப் பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் ஆரோக்கியமான போட்டி உருவாக வேண்டும். அதற்கேற்றபடி அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த வேண்டும்.
            அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிப்பதை மக்கள் கெளரவமாகக் கருதும் சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும்.
*****

No comments:

Post a Comment

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு…

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு… எந்தத் தொந்தரவும் வேண்டாம் எந்தப் பிரச்சனையும் வேண்டாம் எந்தச் சிக்கலும் வேண்டாம் எந்த இம்ச...