27 Jun 2017

மரவேட்டைக்காரர்கள்


மரவேட்டைக்காரர்கள்
எப்படியும் நான்கு வேட்டைக்காரர்கள் வருவார்கள்
என்று காத்திருந்தது காடு!
வந்தவர்கள் காட்டை வேட்டையாடி முடிக்க
மரங்களை வேட்டையாடும்
வித்தியாசமான மனிதர்களைக் கண்டு
பொட்டழிந்து நின்றது காடு!
கட்டிடங்களைக் கட்டிக் கொண்ட
மனிதர்கள் அவ்விடத்தே ஒரு காடு இருந்ததாய்
பிற்காலத்தில் வீரதீர கதைகளைச்
சொல்வார்களாய் ஆனார்கள்!
******

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...