24 Jun 2017

தனிமை


தனிமை
தன் தனிமையைப் போக்கிக் கொள்ள
கூண்டுக்கிளியை வாங்கியவன்
கூண்டுக்கிளியின் தனிமையைப் போக்க
தன் சோகங்களைச் சொல்லத் தொடங்கினான்
அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த
கூண்டுக்கிளிக்கு தன் தனிமை மேல்
முதன் முறையாக நேசம் தோன்றியிருக்கக் கூடும்
அதன் பின் அது பறந்து செல்ல முயற்சிக்கவில்லை
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...