23 Jun 2017

நம்பிக்கைக்கு நேர்ந்த மரணம்


நம்பிக்கைக்கு நேர்ந்த மரணம்
            அண்மை காலமாக  எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் எழுத்துகளில் தொனிக்கும் அவநம்பிக்கை சமூகத்தை எள்ளுகிறது என்பதை விட, நம்பிக்கையோடு அவரைப் பின்தொடர்பவர்களுக்கு விரக்தி கலந்த வேதனையைத் தருகிறது.
            முத்துகிருஷ்ணனின் மரணம் அவரை வெகுவாகப் பாதித்திருக்கிறது. அந்தப் பாதிப்பையும் தாண்டி வெளிவர வேண்டும் என்ற சூட்சுமங்களைத் தராமல், உயிர் வாதைக்குப் பயந்து "நமக்கெதற்கு ஆராய்ச்சி, மசுரு, மண்ணாங்கட்டியெல்லாம்?" என்று அவர் எழுதிய வரிகளை காலச்சுவடு ‍மே-2017 இதழில் படித்த போது வருத்தமாக இருந்தது.
            இதைச் சொல்லி விட்டு, இது தமக்கு நேர்ந்த வரலாற்றுத் தருணம் என்கிறார். இது நம்பிக்கைக்கு நேர்ந்த மரணம் என்றுதான் தோன்றுகிறது.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...