16 Jun 2017

ஜி.எஸ்.டி.யும் - நடிகர்கள் போடும் குஸ்தியும்!


ஜி.எஸ்.டி.யும் - நடிகர்கள் போடும் குஸ்தியும்!
            சினிமா டிக்கெட்டுகளின் ஜி.எஸ்.டி. வரி உயர்வு குறித்து கருத்து கூறும் நடிகர்கள் எல்லாம், அதனால் சினிமா டிக்கெட்டுகளின் விலை கடுமையாக உயர்ந்து விடும் என்று கருத்து கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். விஸ்வரூபம் வெளியாக விட்டால் நாட்டை விட்டே வெளியேறப் போவதாக அறிவித்த கமல் தன்னுடைய எதிர்ப்பில் சினிமாவிலிருந்து விலகுவதாகவே அறிவித்து விட்டார்.
            தமிழ்நாட்டில் எந்த தியேட்டரில் சினிமா டிக்கெட் விலை குறைவாக இருக்கிறது? எல்லாம் தாறுமாறு தக்காளிச் சோறாகத்தான் இருக்கிறது.
            டிக்கெட்டில் போட்டிருக்கும் விலை ஒன்றாக இருக்கிறது, அதற்கு வசூலிக்கும் விலை ஒன்றாக இருக்கிறது. அரசு அறிவித்து இருக்கும் ஜி.எஸ்.டி. எந்த விலைக்கு என்று யாருக்காவது தெரிந்தால் தெளிவு படுத்துங்கள்?
            அதை விட அங்கு கேண்டீன் என்ற ஒன்றை வைத்துக் கொண்டு காமாசோமாவான சம்சாவுக்கும், பாப்கார்னுக்கும், எப்போதோ வந்த கூல் டிரிங்ஸ் பாட்டிலுக்கும் அவர்கள் வைக்கும் விலை இருக்கிறதே ஜி.எஸ்.டி. பர்ஸ்ட் ஆகி பஞ்சர் ஆகி விடும்.
            அது என்னமோ பிரளயமாகி விடும் அளவுக்கு நடிகர்கள் தட்டும் பேட்டிகளைப் பார்க்கும் போது காமெடியாக இருந்தாலும், திருட்டு டி.வி.டி.க்கு ஜி.எஸ்.டி. போட்டால் நிச்சயம் பிரளயமாகி விடும்.
            இருந்தாலும் குழந்தைகள் தின்னும் பிஸ்கெட்டுக்கும் ஜி.எஸ்.டி. போட்டு - முதலில் 18 சதவீதமாக, பின் அதை 12 சதவீதமாக்கிய செய்திகளைப் பார்த்ததும் தலைசுற்றி மயக்கமே வந்து விடும் போலிருந்தது.
            குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கப் போன கைப்புள்ள அதை வாங்கிக் கொண்டு வீடு திரும்புவார் என்றா நினைக்கிறீர்கள்?
*****

No comments:

Post a Comment

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு…

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு… எந்தத் தொந்தரவும் வேண்டாம் எந்தப் பிரச்சனையும் வேண்டாம் எந்தச் சிக்கலும் வேண்டாம் எந்த இம்ச...